உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கட்டட மேஸ்திரியை பிளேடால் வெட்டிய தந்தைக்கு காப்பு

கட்டட மேஸ்திரியை பிளேடால் வெட்டிய தந்தைக்கு காப்பு

தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே திருமழிகை கிராமத்தை சேர்ந்த ராஜப்பா, 50. இவரது மனைவி முனிலட்சுமி, 49. இவர்களது மகன் முனிராஜ், 32, கட்டட மேஸ்திரி.கடந்த, 23ம் தேதி இரவு, 10:30 மணிக்கு, தன் தந்தை ராஜப்பாவுடன், முனிராஜிற்கு வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜப்பா, மகன் முனிராஜை, கழுத்தில் பிளேடால் வெட்டி மிரட்டல் விடுத்தார்.இதில் காயமடைந்த அவர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முனிராஜ் தாய் முனிலட்சுமி புகார் படி, தளி போலீசார் வழக்குப்பதிந்து, ராஜப்பாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி