உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக நதிகள் இணைப்பு சங்க கூட்டத்தில் 70 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு தீர்மானம்

தமிழக நதிகள் இணைப்பு சங்க கூட்டத்தில் 70 குடும்பங்களுக்கு பட்டா கேட்டு தீர்மானம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணகிரி கோவிந்தராஜி, வேப்பனஹள்ளி தன்ராஜ், பர்கூர் சிவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் இளங்கோவன் வர-வேற்றார்.பர்கூர் வட்டம், கீழ்பூங்குருத்தி கிராமத்தில் வனத்தை ஓட்டி வசிக்கும், 70 குடும்பங்களுக்கு வீட்டுமனை, நிலப்பட்டா வழங்க வனத்துறை, வரு-வாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கங்கை முதல் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகளை இணைக்க வேண்டும். அனைத்து விளைபொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்திட வேண்டும். உரம், பூச்சிக் கொல்லி மருந்து இல்லாமல், இயற்கை விவசாயம் செய்திட மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு உதவிட வேண்டும். 'மா'விற்கான விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் வித்யா, மாநில தலைவர் கிருஷ்ணன், மாநில சட்ட ஆலோசகர் சதாசிவன், மாநில நிர்வாகிகள் ராஜா, காவேரி மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை