உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணி

ரூ.10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் பணி

காவேரிப்பட்டணம்:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் கால்வாய்கள் சிதிலமடைந்து, கழிவுநீர் வெளியேறாமல் சாலைகளில் தேங்கி, துர்நாற்றமும் தொற்றுநோய் அபாயமும் ஏற்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவேரிப்பட்டணம் டவுன் பஞ்.,ல் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து அப்பகுதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை டவுன் பஞ்., தலைவர் அம்சவேணி செந்தில்குமார் துவக்கி வைத்தார். மேலும் அப்பகுதியினர் கொடுத்த கோரிக்கைகள், ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தார்.டவுன் பஞ்., துணை தலைவர் மாலினி மாதையன், முன்னாள், தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ராஜன், மற்றும் டவுன் பஞ்., கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை