உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 500க்கும் குறைவான ஆடுகளை வியாபாரிகள், விவசாயிகள் விற்-பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஆடுகளை வாங்க வியாபாரிகள் மிக குறைந்த அளவிலேயே வந்திருந்தனர்.இதனால் நேற்று காலை முதலே, ஆடுகள் வியாபாரம் மந்தமாக நடந்தது. வியாபாரத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆடுகள் குறைந்த அளவே விற்பனையான நிலையில், விற்பனை ஆகாத ஆடுகளுடன் விவசாயிகள், வியாபாரிகள் திரும்பிச் சென்றனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, 10 லட்சம் ரூபாய் அளவுக்கு மட்டுமே ஆடுகள் விற்பனையானதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ