உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தாயை கொல்ல முயன்ற மகன் அதிரடி கைது

தாயை கொல்ல முயன்ற மகன் அதிரடி கைது

ஓசூர் : ஓசூர், சிவசக்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி மலர், 45, கூலித்தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ், 25. இவர் தாயிடம், நேற்று முன்தினம் பரம்பரை சொத்தை இரண்டாக பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், தனது தாயை கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றார். இதில் இடது கையில் காயமடைந்த மலர், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். கொலை முயற்சி வழக்குப்பதிந்த போலீசார், ராஜே ைஷ நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் மீது ராயக்கோட்டை மற்றும் ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன்களில், தலா ஒரு கொலை வழக்கு, உத்தனப்பள்ளி ஸ்டேஷனில் திருட்டு வழக்கு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை