உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஓசூர் 22வது வார்டில் சிறப்பு கூட்டம்

ஓசூர் 22வது வார்டில் சிறப்பு கூட்டம்

ஓசூர், ஓசூர் மாநகராட்சியில் உள்ள, 45 வார்டுகளில் பொதுமக்களின் சேவைகளை மேம்படுத்தும் வகையில், வார்டுதோறும் இரு நாட்கள் சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. 22வது வார்டுக்கு உட்பட்ட முனீஸ்வர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில், அந்த வார்டு கவுன்சிலரும், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான மாதேஸ்வரன் தலைமையில் நேற்று கூட்டம் நடந்தது. உதவி கமிஷனர் நாராயணன் முன்னிலை வகித்தார்.இதில், சாலை, தெருவிளக்கு, சாக்கடை கால்வாய், குடிநீர், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கேட்டு, முனீஸ்வர் நகர், சிவக்குமார் நகர், ஆதவன் நகர், அக்ஷயா ஹோம்ஸ், தேவி நகர், சாய் லே அவுட், பூஞ்சோலை நகர் குடியிருப்பு சங்கங்கள் சார்பில் மனு வழங்கப்பட்டன.கூட்டத்தில், எம்.பி., நிதியிலிருந்து உயர்மின் விளக்கு அமைக்க வேண்டும் என, மாதேஸ்வரனிடம் மக்கள் தெரிவித்தனர். அதனால் அவர், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத்திற்கு போன் செய்தார். அதில் பேசிய எம்.பி., கோபிநாத், '22வது வார்டில் உயர்மின் கோபுரம் அமைக்க, மாநகராட்சிக்கு கடிதம் கொடுத்து, 3 மாதம் ஆகிறது. கமிஷனர் ஆய்வு செய்து இன்னும் இடத்தை தேர்வு செய்து வழங்கவில்லை' என தெரிவித்தார். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை