உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 1,040 பேருக்கு மருத்துவ சிகிச்சை

நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 1,040 பேருக்கு மருத்துவ சிகிச்சை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை, அரசு மேல்நி-லைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடந்தது.இதில், பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் பேசியதாவது:கிருஷ்ணகிரி அணை, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 21வது மருத்துவ முகாம் நடந்துள்-ளது. இதில், 17 வகை சிறப்பு மருத்துவர்கள் மூலம், 1,040 பேர் பதிவு செய்து மருத்துவ சிகிச்சை பெற்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகளும், உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு, அரசு மருத்துவமனை மற்றும் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பேசினார்.தொடர்ந்து, கை மற்றும் கால்களை இழந்த, 4 பேருக்கு முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்-டத்தில் செயற்கை கை மற்றும் கால்கள் அளவீடு செய்யும் பணிகளை பார்வையிட்டார். காசநோய் தடுப்பு பிரிவு சார்பில் தொடர் சிகிச்சை பெற்று வரும், 5 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 49 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, 25 பேருக்கு முதல்வர் மருத்துவ காப்-பீட்டு அட்டை மற்றும் 13 கர்ப்பிணிகளுக்கு ஊட்-டச்சத்து பெட்டங்களை வழங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவகுமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ