ஓசூர்: ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில், வெளிநாட்டு மொழி படிப்புகளுக்கான மையத்தில், தைவான் கல்வி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது. தைபே பொருளாதாரம் மற்றும் கலாசார மைய இயக்குனர் பீட்டர்ஸ் சென், மையத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு விரிவான வாய்ப்புகள் உள்ளன என எடுத்துரைத்தார். மாண்டரின் மொழி கற்பித்தல், வேலைவாய்ப்புகளை நீட்டித்தல், பல்வேறு உதவித்தொகைகள், மானியங்கள் வழங்குதல், மாணவர்கள், ஆசிரியர், கல்வி பரிமாற்ற திட்டங்கள் மற்றும் இந்தியா மற்றும் தைவானில் மாணவர்கள் படிப்பை தொடர வாய்ப்புகள் மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துதல், கல்வி உறவுகள் மற்றும் கூட்டு முயற்சிகள் மூலம் புதுமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக ஒப்பந்தம் நடந்தது.பி.எம்.சி., டெக் கல்வி நிறுவன தலைவர் குமார், எலெக்ட்ரானிக்ஸ், ஆட்டோமோட்டிவ் மற்றும் ஐ.டி., துறைகளில் வேலைவாய்ப்பு பெற மாண்டரின் மொழியை கற்று கொள்ளுமாறு மாணவர்களை அறிவுறுத்தினார். எல்லி சியாங், சென்னை தைபே பொருளாதாரம் மற்றும் கலாசார மைய இயக்குனர் ஜெனரல் ரிச்சர்ட்சென், சென்னை அலுவலகத்தை சேர்ந்த டென்னிஸ் சாய், பி.எம்.சி., கல்வி நிறுவன செயலாளர் மலர், இயக்குனர் சுதாகரன், இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் சரவணன், கஜேந்திரன், கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.