| ADDED : ஜன 13, 2024 11:36 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லண்டன்பேட்டையை சேர்ந்தவர் குணசேகரன், 30. பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு, சென்னை கூடுவாஞ்சேரியை சோந்த அஸ்வினி, 26, என்பவருடன் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயமானது. திடீரென அஷ்வினியை திருமணம் செய்ய குணசேகரன் மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை கிருஷ்ணகிரி வந்த அஸ்வினி, குணசேகரன் பைனான்ஸ் வைத்துள்ள கட்டடத்தின் முதல் தளத்திற்கு சென்றார்.நீண்ட நேரமாகியும் குணசேகரன் வராததால், மாடியின் தடுப்பு சுவர் மீது அமர்ந்த அஸ்வினி, தான் தற்கொலை செய்து கொள்வதாக கூச்சலிட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவல்படி போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்த பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பக்கத்து கட்டடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர், பெண் அமர்ந்திருந்த கட்டடத்தில் தாவி குதித்து, பெண்ணை பிடித்து இழுத்து கீழே அமர வைத்தார். இதையடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மாடியில் ஏறி, மயங்கிய நிலையில் இருந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.