உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு

கரகம் எடுத்தவர் பாதம் தரையில் படாமல் செல்ல பக்தர்கள் வழிபாடு

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, ஏ.சப்பானிப்பட்டியில் நடந்த காமாட்சி-யம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர்.தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள, ஏ.சப்பானிப்பட்-டியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு தை மாத திரு-விழா கடந்த, 2ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. கிரா-மத்தில் உள்ள மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்து வருதல், முரு-கனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தல் என ஒரு வாரமாக திருவிழா நடந்து வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று, காமாட்சி-யம்மன் கரகத்தை பூலான் ஆற்றங்கரையில் சக்தி அழைப்பு செய்-தபோது, அருள் வந்த பக்தர் மீது கரகத்தை வைத்து, கோவிலுக்கு அழைத்து சென்றனர்.அப்போது, கரகம் எடுத்து செல்பவர் பாதம் தரையில் படாமல் இருக்க, 1 கி.மீ., துாரத்திற்கு பக்தர்கள் தரையில் சாஷ்டாங்கமாக படுத்து கொண்டனர். அவர்கள் மீது, அம்மன் கரகம் சுமந்தவர் நடந்து சென்றார். இதனால், குழந்தை பாக்கியம், நோய் பாதிப்பு விலகும், தொழில் வளர்ச்சி, நினைத்த காரியம் கைகூடும் என்-பதால் இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருள் வாக்கு நடந்தது. ஏ.சப்பானிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி-களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை