உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., கட்சியில் இணைந்தவர்கள் அ.தி.மு.க.,வில் செயல்படாதவர்கள்

பா.ஜ., கட்சியில் இணைந்தவர்கள் அ.தி.மு.க.,வில் செயல்படாதவர்கள்

ஓசூர் : ''அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் இணைந்தனர் என்றால் அவர்கள், கட்சியில் செயல்படாமல் இருந்திருப்பார்கள்,'' என, அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி கூறினார்.கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., முன்னிலையில், அக்கட்சியில், 10,000 பேர் இணையும் விழா வரும், 11ல் நடக்க உள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம், மேற்கு மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் ஓசூரில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி துணை பொதுச்செயலர் முனுசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் இணைந்தனர் என்றால், அவர்கள், கட்சியில் செயல்படாமல் இருந்திருப்பார்கள். தமிழகத்தில், 2 கோடி தொண்டர்களை கொண்ட பெரிய கட்சி, அ.தி.மு.க., தான். அந்த கட்சி தலைமையில் தான் கூட்டணி அமையும். அது தேசிய அல்லது மாநில கட்சியாக இருந்தாலும் சரி. அ.தி.மு.க., தலைமையில் வரும் கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலர் சென்னகிருஷ்ணன், மாவட்ட துணை செயலர் மதன், மாவட்ட கவுன்சிலர் வெங்கடாசலம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை