உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் முப்பெரும் விழா

அரசு பள்ளியில் முப்பெரும் விழா

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நாட்டாண்மை கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல், துாய்மை பணியாளர்களுக்கு பரிசு, 'மஞ்சப்பை' விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் என, முப்பெரும் விழா நடந்தது. தலைமையாசிரியை மணிமேகலை தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். தமிழ் கூடலில், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி, நடனம் போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வேப்பனஹள்ளி அரசு மருத்துவமனை மருத்துவர் லோகேஷ், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், 'மஞ்சப்பை'யும் வழங்கினார். நாடக கலைஞர்கள் செல்வி, சந்தியா இருவரும், நாடகத்தின் மூலம் பிளாஸ்டிக் பையை தவிர்த்து 'மஞ்சப்பை' பயன்படுத்த நடித்துக் காட்டினர். துாய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பையை பிரித்து காட்டினர். 11 துாய்மை பணியாளர்களுக்கு, 'மஞ்சப்பை' பரிசாக வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாந்தி, திடப்பொருள் மேலாண்மை குறித்து பேசினார். விழாவில், பெற்றோர் கழக உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி