உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிருஷ்ணகிரியில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரியில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி

கிருஷ்ணகிரி : தமிழகத்தில், லோக்சபா தேர்தல் கடந்த ஏப்., 19ல் நடந்தது. கிருஷ்ணகிரி தொகுதியின் ஓட்டு எண்ணிக்கை வரும் ஜூன், 4ல், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் வளாகத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான பயிற்சியை, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான சரயு தொடங்கி வைத்து பேசியதாவது:கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள், 10 மேசைகள் மூலம், எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு செய்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சட்டசபை தொகுதி வாரியாக தலா, 14 மேசையில் எண்ணப்பட உள்ளன. இந்த மேசைகள் அனைத்திற்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதற்காக மொத்தம், 102 மேற்பார்வையாளர்கள், 102 உதவியாளர்கள் மற்றும், 102 நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஓட்டு எண்ணிக்கை சுற்றுகள் வாரியாக எண்ணப்பட்டு முடிவுகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அறிவிப்பு பலகையில், சுற்றுகள் வாரியாக ஓட்டு விபரம் வெளியிடப்படும். ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும், அனைத்து அரசு அலுவலர்களும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை, தவறாது கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இந்த பயிற்சியில் டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரியங்கா, பாபு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை