உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு பயணம்: தமிழக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஓசூர்: தொடர் விடுமுறையால் கர்நாடகா வாழ் தமிழர்கள் சொந்த ஊருக்கு சென்றதால், தமிழக எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.கர்நாடகா மாநிலத்தில், தமிழக மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர்; குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கர்நாடகா வாழ் தமிழர்கள், தங்களது சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் மாலை முதல் புறப்பட்டு சென்று வருகின்றனர். சிலர் வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி பெற்று சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அதனால், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட்டில் இருந்து, தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியை தாண்டி, 3 கி.மீ., துாரத்திற்கு மேல், பெங்களூரு - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, ஜூஜூவாடி அருகே சிப்காட் ஜங்ஷன் பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடப்பதால், வழக்கத்தை விட நேற்று அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை