இருவேறு சாலை விபத்தில் முதியவர் உட்பட 2 பேர் பலி
கிருஷ்ணகிரி,: பர்கூர் தாலுகா ஜெகதேவி அருகே உள்ள ஜி.நாகமங்கலத்தை சேர்ந்தவர் முனுசாமி, 39. கூலித் தொழிலாளி. இவரும், கொண்-டப்பநாயனப்பள்ளியை சேர்ந்த கோவிந்தன், 55, என்பவரும் நேற்று முன்தினம் மொபட்டில் ஜெகதேவி - பர்கூர் சாலை சிப்காட் தண்ணீர் தொட்டி அருகே சென்றனர்.பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், முனுசாமி இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.* காவேரிப்பட்டணம் கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்-திரன், 65. இவர் நேற்று முன்தினம் காலை, கிருஷ்ணகிரி - தர்ம-புரி தேசிய நெடுஞ்சாலை சப்பானிப்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக சென்ற கன்டெய்னர் லாரி மோதியதில், படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்-தனர். அங்கு ராஜேந்திரன் நேற்று முன்தினம் மதியம் இறந்தார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.