உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவிக்கும் கிராமம்; அடிப்படை தேவைகளை செய்து தர கோரிக்கை

குடிநீர், கழிப்பறை வசதியின்றி தவிக்கும் கிராமம்; அடிப்படை தேவைகளை செய்து தர கோரிக்கை

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவ ட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அடுத்த குள்ளம்பட்டி கிரா-மத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்-கின்றனர். இங்கு கடந்த, 2020--21ல், 9.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, 15வது நிதிக்குழு மான்ய திட்-டத்தில், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து, சமு-தாய கழிப்பிடம் கட்டப்பட்டது. இது தற்போது வரை காட்சி பொருளாக, மக்கள் பயன்படுத்-தாமல் பூட்டி கிடக்கிறது. இதனால் கிராமத்தி-லுள்ள பெண்களும் விவசாய நிலங்களில் உடல் உபாதைகளை கழிக்க செல்லும், அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம தெருக்களில் ஆங்-காங்கே சேறும், சகதியுமாக மக்கள் நடமாட முடியாத நிலையில் உள்ளது. மேல்நிலைத்தொட்டியில் இருந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீரை, முறையாக தெருக்களில் குழாய் அமைத்து வழங்காமல், தொட்டியின் கீ‍ழே சில குழாய்கள் அமைத்து தண்ணீர் சப்ளை நடக்கி-றது. இதனால் விவசாய பணி, அரசு பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகின்-றனர். சேறும், சகதியுமாக உள்ள தெருக்களில் நடந்து சென்று குடி தண்ணீர் எடுத்து வருகின்றனர். சம்-மந்தப்பட்ட அதிகாரிகள் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டு-மென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்-றனர்.இதுகுறித்து பர்கூர் பி.டி.ஓ., செந்திலை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆய்வு பணியில் உள்-ளதால், பிறகு பேசுவதாக கூறி போனை துண்-டித்தார். குள்ளம்பட்டி பஞ்., ஊராட்சி செயலாளர் பரசுராமனிடம் கேட்டபோது அவர், ''கழிப்பிடம் தற்போது வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது உண்மை தான். பயன்பாட்-டிற்கு கிராம மக்கள் யாரும் கேட்காததால் பூட்-டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பி-னர்களிடம் கழிப்பறையை பயன்படுத்துங்கள் என, சாவியை கொடுத்தபோது அவர்கள் முன்வ-ரவில்லை. தற்போது மழை பெய்ததால் தெருக்-களில் சேறும், சகதியுமாக உள்ளது. போதிய நிதி இல்லாததால், ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் வழங்க இயலவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை