உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 60 சதவீதம் நிறைவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி 60 சதவீதம் நிறைவு

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள்--2026 குறித்து, நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கடந்த, 4 முதல் வீடு வீடாக சென்று, கணக்கீட்டு படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெற்று வருகின்றனர். மாவட்டத்தின், 6 சட்டசபை தொகுதிகளிலும், 8,40,875 ஆண் வாக்காளர்கள், 8,39,439 பெண் வாக்காளர்கள், 312 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம், 16,80,626 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 15,96,513 வாக்காளர்களுக்கு (95 சதவீதம்) கணக்கீட்டு படிவமானது வழங்கப்பட்டுள்ளது.இதுவரை வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட 10,17,566 (60.55 சதவீதம்) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நாளதுவரை, 58,635 இறந்த வாக்காளர்கள், 23,806 நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், 4,177 இருமுறை பதிவு, 1,467 முகவரியில் இல்லாதவர்கள் மற்றும் மற்றவை, 80 என மொத்தம், 88,165 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை திரும்ப ஒப்படைக்க வரும் டிச.,4 கடைசி நாள்.இவ்வாறு, அவர் கூறினார்.முன்னதாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை