உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை, ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறக்கப்படும் நீர் ஆகியவற்றால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம், 433 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 643 கன அடியாக அதிகரித்தது.அணையிலிருந்து பாசனத்திற்காக கால்வாயிலும், தென்பெண்ணை ஆற்றிலும் என மொத்தம், 307 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில், 50.85 அடியாக நீர்மட்டம் உள்ளது. கடந்த, 3 நாட்களாக, அவ்வப்போது கிருஷ்ணகிரியில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, தளியில், 10 மி.மீ., பாரூர், ஊத்தங்கரையில் தலா, 8, கிருஷ்ணகிரி, 5.30, தேன்கனிக்கோட்டை, 5, போச்சம்பள்ளி, 4.20, அஞ்செட்டி, 2 மி.மீ., என மொத்தம், 42.50 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை