உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தமிழக அமைச்சரவையில் அடுத்த 10 ஆண்டிற்குள் இடம் பிடிப்போம்

தமிழக அமைச்சரவையில் அடுத்த 10 ஆண்டிற்குள் இடம் பிடிப்போம்

போச்சம்பள்ளி: ''தமிழக அமைச்சரவையில் அடுத்த, 10 ஆண்டிற்குள் இடம் பிடிப்போம்,'' என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் நேற்று நடந்த, த.வா.க.,வின், 13வது ஆண்டு துவக்க விழா மற்றும் கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு, மாநிலங்களவையில் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்போம். கட்சி துவங்கி, 10 ஆண்டுகளில் சட்டசபையில் உறுப்பினர் ஆவோம் என கூறியதை சாதித்து காட்டினோம். அதேபோல் அடுத்த, 10 ஆண்டுகளில், தமிழக அமைச்சரவையில், த.வா.க., இடம் பிடிக்கும். போச்சம்பள்ளி சிப்காட்டில் வடமாநிலத்தவர் அதிகளவு பணியாற்றுவதை சட்டசபையில் குரலெழுப்பி, அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுத்தோம். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லுாரி தொடங்க முதல் அச்சாரம் போட்டது நாங்கள் தான். தமிழகத்திலுள்ள அரசு உயர் பதவிகளில் அதிகளவு வட மாநிலத்தவர் இருந்து வந்த நிலையில், சட்டசபையில் பேசி, டி.என்.பி.சி., தேர்வு மூலம், தமிழகத்தில் உள்ளவர்கள் உயர் பதவிக்கு செல்ல, வழிவகை செய்ததும், தமிழக வாழ்வுரிமை கட்சி தான். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை