உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மோதி தொழிலாளி பலி

தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே கேரட்டி பாரதி நகரை சேர்ந்தவர் அர்-ஜூனன், 46. கூலித்தொழிலாளி; இவர் கடந்த, 22 இரவு, 7:45 மணிக்கு, அஞ்செட்டி செல்ல அப்பகுதியிலுள்ள பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். அப்போது, அவ்வழியாக தொட்டமஞ்சு பகுதியை சேர்ந்த மாதப்பா, 27, என்பவர் ஓட்டிச்சென்ற, டி.வி.எஸ்., ஜூப்-பிட்டர் ஸ்கூட்டர், அர்ஜூனன் மீது மோதி படுகாயமடைந்தார். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனும-திக்கப்பட்ட அர்ஜூனன், நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அஞ்செட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ