உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெரியாறு அணைப் பிரச்னை பேச்சுவார்த்தை பயனளிக்காது

பெரியாறு அணைப் பிரச்னை பேச்சுவார்த்தை பயனளிக்காது

மதுரை : 'முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் இரட்டை வேடம் போட்டுவரும் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது எந்த விதத்திலும் பயனளிக்காது என்பதை தமிழக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும், என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.மதுரையில் முல்லை பெரியாறு உரிமை மீட்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் கட்சி தலைவர் சீமான் தலைமையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது:முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவோம் என கேரளாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்., கட்சி தலைமையிலான அரசு கூறியுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரை வஞ்சகமாக தடுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அதே பொய்யை அடிப்படையாக்கி பலமான முல்லை பெரியாறு அணையை தகர்க்கவும் திட்டமிட்டுள்ளனர். இரட்டை வேடம் போடும் கேரள அரசிடம், தமிழக அரசு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது. அணை மீதான நமது உரிமையை மீட்டெடுக்க கடமைப்பட்டுள்ளோம். அக்., 15ல் மதுரையில் இருந்து முல்லைப் பெரியாறுக்கு ஊர்வலமாக செல்வோம். எல்லையில் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் அனைத்து உணவுப் பொருட்களையும் தடுப்போம், என பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை