உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அயோத்தி போக முடியாமல் சேலம் திரும்பிய 106 பக்தர்கள்

அயோத்தி போக முடியாமல் சேலம் திரும்பிய 106 பக்தர்கள்

அவனியாபுரம்:சேலத்தை சேர்ந்த, 106 பக்தர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக காசி, அயோத்தி செல்ல சேலத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில், ஒருவருக்கு 29,000 ரூபாய் வீதம் செலுத்தினர். நேற்று காலை, 106 பயணியரும், டிராவல்ஸ் மேலாளர் ராஜாவுடன் மதுரை விமான நிலையம் வந்தனர்.அவர்கள் டிக்கெட்டுகளை, 'இண்டிகோ' நிறுவன அதிகாரிகள் சோதனை செய்து, இந்த டிக்கெட்டுகள் கம்ப்யூட்டரில் பதிவாகவில்லை எனக்கூறி, பயணியரை திருப்பி அனுப்பினர். இது குறித்து, பயணியர் ராஜாவிடம் தெரிவித்தனர்.அவர், சேலத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திடம் பேசினார். பின்பு அவர் பயணியரிடம், 'டிக்கெட் புக்கிங்கில் கம்ப்யூட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்து விட்டது. ஜூலை 18ல் மீண்டும் டிக்கெட் வாங்கி, அயோத்தி செல்ல ஏற்பாடு செய்கிறோம்' என, தெரிவித்தார். அவர் கொடுத்த உறுதியை அடுத்து, அனைவரும் மீண்டும் சேலம் திரும்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை