உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 1640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

1640 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மதுரை : உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.பி., விஜயகார்த்திக்ராஜா உத்தரவுபடி, மதுரை டி.எஸ்.பி., ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., முத்துராஜா தலைமையிலான போலீசார், பைகாரா இ.பி. மெயின் ரோடு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது சரக்கு ஆட்டோவை சோதனையிட்டபோது 1640 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக உரிமையாளர் முனிச்சாலை வினோத் 36, லோடுமேன்கள் பழைய மாகாளிப்பட்டி மணிகண்டன் 22, அழகுமணி 23, ஆகியோரை கைது செய்தனர். உணவுப்பொருள் கடத்தல், பதுக்கல் குறித்து 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணில் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை