உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மஞ்சுவிரட்டு அனுமதி வழக்கு

மஞ்சுவிரட்டு அனுமதி வழக்கு

மதுரை: மேலுார் அருகே சுமதிபுரம் மெய்யர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:செம்மினிபட்டி அருகே சுமதிபுரத்தில் கோயில் ஆடி திருவிழாவையொட்டி ஆக.,16 ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி, பாதுகாப்பு வழங்கக்கோரி மதுரை கலெக்டர், எஸ்.பி., கீழவளவு போலீசாருக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் ஜனவரி-மே மாதம்வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இக்கிராமம் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அரசிதழில் இடம்பெறவில்லை. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு தரப்பு வழக்கறிஞர் விபரம் பெற்று ஆக.,9ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை