| ADDED : ஆக 22, 2024 03:06 AM
பெயர்ப்பலகை தேவைவில்லாபுரம் மீனாட்சி நகர் வைத்தீஸ்வரன் தெருவில் உள்ள தெருப் பலகையில் எழுத்துக்கள் அழிந்துவிட்டன. இத்தெருவுக்கு வரும் புதியவர்கள் தெருப் பெயர் புரியாமல் குழப்பம் அடைகின்றனர். புதிய பெயர் பலகை அமைக்க வேண்டும்.- -- ரவீந்திரநாத், வில்லாபுரம்அபாய டிரான்ஸ்பார்மர்மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் - சர்வேயர் காலனி ரோட்டில் ஒரு ஓட்டல் அருகே டிரான்ஸ்பார்மர் விழும் அபாயத்தில் உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதனை விரைந்து சரி செய்ய வேண்டும்.- -கோபாலன், சர்வேயர் காலனிகழிவுநீர் வெளியேற்றம்விளாங்குடி மீனாட்சி நகர் 5வது தெருவில் உள்ள ஒருமஹால் அருகே கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் நடக்கவே சிரமமாக உள்ளது. நோய் தொற்று அபாயம் உள்ளதால் உடனே சுத்தம் செய்ய வேண்டும்.- -பிரசன்னா, விளாங்குடிதுாய்மையற்ற குடிநீர்மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் மாநகராட்சி குழாயில் குடிநீர் கலங்கலாக வருகிறது. குழாய் உடைப்பை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.- -சுப்பிரமணியன், வில்லாபுரம்காவலாளி வேண்டும்மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து நடந்ததையொட்டி மறு சீரமைப்பு பணி நடக்கிறது. கோயிலை சுற்றி வேலி அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிக்க ஆளின்றி அங்கு சிறுநீர் கழித்து அசுத்தம் செய்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை தேவை.- -பிரபு, மேலமாசி வீதிகுப்பையால் சிரமம்மதுரை தாசில்தார் நகர் முகவை தெருவின் கிழக்கு பகுதியில் காலி பிளாட்டில் கழிவுகள், குப்பை கொட்டுவதால் நாய், எலி, பாம்புகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அப்பகுதியை சுத்தம் செய்து தர வேண்டும்.- -வேலன், தாசில்தார் நகர்அடர்ந்துள்ள புதர்கள்திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் சிதம்பரனார் தெருவில் காலி பிளாட்டில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர் நீண்டகாலமாக அகற்றப்படாமல் உள்ளதால் விஷ ஜந்துக்களின் வாழுமிடமாக மாறியுள்ளது. பகலில் கூட மக்கள் நடமாட அச்சமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் சுத்தம் செய்து தர வேண்டும்.-- கண்ணன், திருப்பரங்குன்றம்