உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

தெற்குவாசல் பாலத்திற்கு இணையாக மற்றொரு பாலம் திட்ட அறிக்கை தயாராகிறது

மதுரை : மதுரை நகருக்குள் வரும் பிரதான ரோடுகள் அனைத்தையும் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தெற்கு வாசல் - அருப்புக்கோட்டை செல்லும் ரோட்டையும் விரிவுபடுத்தும் பணிகள் நடக்கின்றன.இந்த ரோட்டில் அவனியாபுரம் முதல் விமான நிலையம் வரை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்தாகிவிட்டது. விமான நிலையம் முதல் ரிங்ரோடு மண்டேலா நகர் வரை விரிவுபடுத்த மரம், மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வில்லாபுரம் முதல் அவனியாபுரம் பைபாஸ் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். விரைவில் ரோடு விரிவாக்கப்பணிகள் நடக்க உள்ளன.தெற்குவாசல் பகுதியில்ரயில்வே மேம்பாலம் மிகக்குறுகலாக உள்ளது. இதுவும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த பாலம் 7.5 மீ., அகலம் உள்ளது. அருகிலேயே இடதுபுறமாக ஒரு பாலம் அமைப்பதா, பாலத்தை விரிவுபடுத்துவதா என்ற ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக அமையும் பாலம் 12 மீ., அளவில் இருக்கும். அதற்கு அருகில்இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும். விமான நிலையம், அருப்புக்கோட்டை, துாத்துக்குடி என முக்கிய பகுதிகளுக்கு செல்லும் பாதை என்பதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது. அதற்கேற்ப விரைவாக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகன காந்தியிடம் கேட்டபோது, ''இந்த பாலத்தோடு இணைந்தவாறு மற்றொரு பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அதன்பின் அரசிடம் சமர்ப்பித்து நிர்வாக அனுமதி பெற்று பணிகள் துவங்கும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 28, 2024 09:41

நெடும்சாலை பொறியாளர்கலே.. தற்போதுள்ள பாலம் கட்டி சுமார் இருபது வருடங்கள் இருக்கலாம். அன்றேல் நான்கு வழி பாலம் அமைத்திருந்தால், சிலவே இருந்திருக்காது. மிக அறிவிலிகள் நீங்கள் . தற்சமயம் கட்டுவது எளிது அல்ல இனிமேலாவது அறிவுடன் செயல்படுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை