மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்
19 hour(s) ago
பள்ளி, கல்லுாரி செய்திகள்
19 hour(s) ago
பாலகிருஷ்ணாபுரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
20 hour(s) ago
பள்ளி வகுப்பறைக்குள் வரும் விஷ பூச்சிகள்
20 hour(s) ago
இன்று (டிச.17) மின்தடை
20 hour(s) ago
சின்னமனுார் : 'இரட்டை இலைக்கு ஆக்சிஜன் கொடுத்து மீட்டெடுத்து தொண்டர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய கடமை உள்ளது' என தேனி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் பேசினார். சின்னமனுார் பகுதியில் அவர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: முன்னாள் அமைச்சர்கள்மீதுள்ள வழக்குகள், கொடநாடு கொலை வழக்கிற்கு பயந்து அ.தி.மு.க., தி.மு.க., விற்கு உதவி வருகிறது. ஜெ.,வை நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொன்றதாக கொலைப் பழி கூறினார்கள். ஆனால் ஆர்.கே. நகர் மக்கள் எல்லா பழிகளையும் துடைத்தெறிந்து எனக்கு வெற்றியை தந்தனர். இப்போது இரட்டை இலையை துரோக கும்பல்துாக்கி வருகிறது. இரட்டை இலை சின்னம் மிக பலவீனமாக உள்ளது.அதை மீட்டெடுத்து ஆக்சிஜன் கொடுத்து தொண்டர்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டியது எனது கடமை.ஜெ.,யின் கட்டளைக்காக ஒதுங்கியிருந்தேன். இனி தேனியிலிருந்து என்னை பிரிக்க முடியாது. இனி நான் இங்கேயே தான் இருப்பேன். எந்த கொம்பனாலும் என்னை தேனியிலிருந்து பிரிக்கமுடியாது. இங்கு அடிக்கும் குக்கர் விசில் சத்தம் 40 தொகுதிகளிலும் அடிக்க வேண்டும் என்றார்.
19 hour(s) ago
19 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago