| ADDED : ஆக 16, 2024 04:35 AM
மதுரை: சுதந்திர தினத்தையொட்டி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.செட்டிக்குளத்தில் தலைவர் பூங்கோதை தலைமை வகித்தார். துணைத் தலைவர் உமாதேவி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரி, வி.ஏ.ஓ., ஜெகதீஷ்குமார் பங்கேற்றனர். தார்சாலை அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காதக்கிணறு ஊராட்சியில் தலைவர் செல்வி தலைமை வகித்தார்.துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி, வி.ஏ.ஓ., பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். செயலாளர் செல்லப்பாண்டி நன்றி கூறினார். மேலுார்
வெள்ளரிப்பட்டியில் கலெக்டர் சங்கீதா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் அரசு திட்டங்கள் குறித்து கலெக்டர் எடுத்துரைத்தார். கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, டி.ஆர்.ஓ., சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கலந்து கொண்டனர்.கம்பூரில் ஒன்றிய பொறியாளர் கணேசன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் இளைஞர்கள் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மது இல்லாத ஊராட்சியாக மாற்ற வேண்டும். கள்ளத்தனமாக மது விற்பனை செய்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடப்பம்பட்டியில் மதுக்கடை திறக்ககூடாது, உயிரி பல்வகைமை மேலாண்மை குழு அமைத்து இயற்கை வளங்களை ஆவணமாக பதிவு செய்து பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.