உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை: சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 'முதல்வர் மாநில இளைஞர் விருது' வழங்கப்படுகிறது. விருதுக்கு 15 முதல் 35 வயதுக்குபட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.2023 ஏப்.1 முதல் 2024 மார்ச் 31 வரை மேற்கொண்ட சேவையை குறிப்பிட வேண்டும். தமிழகத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் குடியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனம், பல்கலை, கல்லுாரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.மே 15 க்குள் www.sdat.tn.gov.inஇணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழக அளவில் தலா 3 ஆண், பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆக.,15 சுதந்திர தினவிழாவில் ரூ.ஒரு லட்சம் ரொக்கம், பதக்கம், சான்றிதழ் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை