மேலும் செய்திகள்
நெல்லைக்கு சிறப்பு ரயில்
18 hour(s) ago
ரயில்வே ஆலோசனை குழுவுக்கு கவுரவ ஊதியம்
18 hour(s) ago
மதுரை: மதுரையில் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் ஆறுமுகம், உதவியாளர் சுதாகருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமின் அனுமதித்தது.மதுரை கண்ணனேந்தல் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரசுராமன். மகன் பெயருக்கு சொத்து வரி மாற்றம் செய்ய மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் விண்ணப்பித்தார். கண்ணனேந்தல் பில் கலெக்டராக இருந்த ஆறுமுகத்தின் ஒப்புதலுக்கு வந்தது. ஒப்புதல் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது அவரையும், உதவியாளர் சுதாகரையும் கைது செய்தனர். இருவரும் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு: மனுதாரர்கள் அப்பாவிகள். சம்பவத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை.அரசு தரப்பு: விசாரணை முடிந்துவிட்டது. மனுதாரர்களிடமிருந்து தொகை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: வழக்கின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். மறு உத்தரவு வரும்வரை லஞ்ச ஒழிப்பு போலீசில் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
18 hour(s) ago
18 hour(s) ago