உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிறை கைதிகளுக்கு பேக்கரி கிளாஸ்

சிறை கைதிகளுக்கு பேக்கரி கிளாஸ்

மதுரை : மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறு தானிய உணவுகள், மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயற்சியின் நிறைவு நாள் நடந்தது.நபார்டு தேசிய வங்கியின் உதவி பெற்ற சாஜர் ஹெல்த் எஜுகேஷன் அண்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் 32 வகையான இனிப்பு, கார, பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்து சிறை கைதிகளுக்கு கற்று கொடுக்கப்பட்டது. இவர்கள் தயாரிக்கும் பொருட்கள் மத்திய சிறை சந்தையில் பொதுமக்களுக்காக விற்பனைக்கு வரும்.நிகழ்ச்சிக்கு மதுரை டி.ஐ.ஜி., பழனி தலைமை வகித்தார். சிறை கண்காணிப்பாளர் சதீஸ் குமார், நபார்டு வங்கியின் பொது மேலாளர் சக்திபாலன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் கணேசன், சாஜர் அறக்கட்டளையின் தலைவர் ஜாஸ்மின் பங்கேற்றனர். நசீம் பானு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை