உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைதியிடம் ரூ.5000 லஞ்சம்; சிறை காவலர் சஸ்பெண்ட்

கைதியிடம் ரூ.5000 லஞ்சம்; சிறை காவலர் சஸ்பெண்ட்

மதுரை : மதுரை சிறையில் கைதியிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கஞ்சா சப்ளை செய்த புகாரில் காவலர் முகமது ஆசீப் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலையில்,கோர்ட் விசாரணைக்கு சென்று திரும்பும் கைதிகள் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். சிறைக்கு வந்தபிறகு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையில் சிறை காவலர்கள் சிலருடன் கைதிகள் 'நட்பு' ரீதியாக பழகி தேவையான பொருட்களை மறைமுகமாக பெற்றுக்கொள்கின்றனர்.இப்படி செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா வழங்கியதற்காக ரூ.5 ஆயிரத்தை அவரது நண்பர் மூலம் சிறை காவலர் முகமது ஆசிப் என்பவர் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கண்காணிப்பாளர் சதீஷ்குமார் விசாரணையில் உண்மை என தெரியவந்ததை தொடர்ந்து அவரை சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ