மேலும் செய்திகள்
உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்: கோர்ட் அதிருப்தி
31-Aug-2024
மதுரை : உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு:கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே வெண்ணெய்மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக கத்தப்பாறை, அதுார் பகுதியில் உள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2019 அக்.,23ல் நீதிபதிகள் அமர்வு, 'நிலத்தை மீட்டு, தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதை நிறைவேற்றாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி அமர்வு:கோயில் நிலம் 547 ஏக்கர் 3 கிராமங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்நீதிமன்றம் உத்தரவிட்டும் கோயில் சொத்துக்களை பாதுகாக்க அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 547 ஏக்கரில் 47 ஏக்கர் மீட்கப்பட்டுள்ளது. அரசு தரப்பின் பதிலில் திருப்தி இல்லை.' அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர் (சென்னை), வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2019 முதல் பணிபுரிந்த மற்றும் தற்போது பணிபுரியும் அறநிலையத் துறையின் அனைத்து அதாவது மண்டல இணை கமிஷனர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், கரூர் மாவட்ட எஸ்.பி., வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செப்.23 ல் ஆஜராக வேண்டும். தற்போதைய முன்னேற்றம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
31-Aug-2024