உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை புதுமண்டபம் டிச.31 க்குள் புனரமைக்க நீதிமன்றம் உத்தரவு; திட்டமதிப்பு ரூ.1.50 கோடி

மதுரை புதுமண்டபம் டிச.31 க்குள் புனரமைக்க நீதிமன்றம் உத்தரவு; திட்டமதிப்பு ரூ.1.50 கோடி

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிச.,31 க்குள் புனரமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: மீனாட்சி அம்மன் கோயில் அருகில் கலைநயமிக்க புதுமண்டபம் உள்ளது. அதில் கடைகள் இருந்தன. மண்டபத்தை புனரமைப்பதற்காக கடைகள் குன்னத்துார் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. மண்டபத்தை புனரமைக்கவில்லை. சுற்றுலா பயணிகளை பார்வையிட அனுமதிக்கவில்லை. புனரமைப்பு பணிக்காக ஒருவர் நன்கொடை தர முன்வந்துள்ளார். புனரமைப்பு பணி ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டது. புனரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுடன் புனரமைப்பு பணி துவங்கியுள்ளது.சிற்ப வேலைப்பாடு என்பதால் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். திட்ட மதிப்பு ரூ.1 கோடியே 50 லட்சம். இத்திருப்பணியை நன்கொடை அடிப்படையில் செய்துதர மதுரை செல்லுார் ராஜேந்திரன் முன்வந்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: புனரமைப்பு பணியை 2024 டிச.,31க்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை