உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழாய் பதிக்க புதிய சாலையை தோண்டுவதால் மக்கள் அவதி

குழாய் பதிக்க புதிய சாலையை தோண்டுவதால் மக்கள் அவதி

பாலமேடு: பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குடிநீர் திட்ட குழாய்களை சாலையில் பள்ளம் தோண்டி பதிக்கின்றனர்.இங்குள்ள லக்கம்பட்டி முதல் ராமகவுண்டன்பட்டி இடையே நெடுஞ்சாலைத் துறை சார்பில் 4 கி.மீ., துாரம் தார் சாலை ஓராண்டுக்கு முன் அமைக்கப்பட்டது. சில நாட்களாக இப்பகுதியில் வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.இதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அகற்றாமல், சாலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பதிக்கின்றனர். இதனால் புதிய தார் சாலை சேதமடைந்ததுடன் கிராம போக்குவரத்து பாதித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வந்த அரசு பஸ் கிராமத்திற்கும் செல்ல முடியாமல், திரும்பவும் முடியாமல் வனப்பகுதியில் நிறுத்தப்பட்டது. டிரைவர், கண்டக்டர் காலை வரை காத்திருந்து திரும்பினர். டூவீலர் கூட செல்லமுடியவில்லை. சாலையை சேதப்படுத்தாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிநீர் குழாய் பதிக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்