உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வலியுறுத்தல்

மதுரை : மதுரையில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்., சங்க கிளைக் கூட்டம் தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ஒச்சாதேவன், குணசீலன், சவுந்தரராஜன், சேதுராமன் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஷாஜஹான் தீர்மானங்களை விளக்கினார்.15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை திட்டமிட்டு காலம் கடத்தும் தமிழக அரசை கண்டிப்பது, 106 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க தமிழக அரசும், நிர்வாகமும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு சிறப்பு மருத்துவ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.70 வயது பூர்த்தியானவர்களுக்கு பத்து சதவீத உயர்வு தொகையை ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும். அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தை சீரமைக்க 8 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அல்லது அரசு போக்குவரத்து தொழிலாளர்களை அரசு ஊழியர்கள் என அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை