| ADDED : ஜூலை 05, 2024 11:18 PM
மதுரை: மதுரையில் பயன்படுத்தப்பட்ட காரை, வழக்கில் சிக்கியதை மறைத்து ரூ.15.50 லட்சத்திற்கு விற்று மோசடி செய்த 3 பேர் மீது புதுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மதுரை மாவட்டம் மேலுார் மலம்பட்டியைச் சேர்ந்தவர் முத்து. இவர் மாட்டுத்தாவணி அமிர்தா கார்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட காரை வாங்க அணுகினார். எந்த ஒரு வில்லங்கம், வழக்கு, பிரச்னை இல்லை என்று நிறுவன உரிமையாளர் பாலமுருகன், அவரது உறவினர் கோபிகிருஷ்ணன் கூறியதை நம்பி மகேந்திரா எக்ஸ்.யு.வி., மாடல் காரை ரூ.15.50 லட்சத்திற்கு வாங்கி 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில் அந்த கார் சிவகங்கை மாவட்டம் திருவேகம்புத்துார் போலீஸ் ஸ்டேஷன் வழக்கு ஒன்றில் தொடர்பு உடையது என போலீசார் பறிமுதல் செய்தனர். முத்து புகாரின் பேரில் பாலமுருகன், கோபிகிருஷ்ணன், காரின் முதல் உரிமையாளர் விஜய் மீது வழக்குப்பதிந்தனர்.