உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

மதுரை : மதுரை மாவட்டம் புளியங்குளம் அரசு பள்ளியில் ஏ.என்.டி கல்வி, மருத்துவம் சமூக மேம்பாடு அறக்கட்டளை சார்பில் இலவச பொதுமருத்துவம், இதயம், கண், செவித்திறன் பரிசோதனை முகாம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். மதுரை பாண்டியன் மருத்துவமனை சார்பில் இ.சி.ஜி, எக்கோ பரிசோதனைகள், வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை, மதுரை சவுண்ட்ஸ் குட் சார்பில் இலவச செவித் திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது.கொ.புளியங்குளம் ஊராட்சி தலைவர் சிவகாமி துவக்கி வைத்தார். ஏ.என்.டி., அறக்கட்டளை பொருளாளர் வேங்கடராமனுஜம், புளியங்குளம் ஊராட்சி துணைத் தலைவர் அருவராணி, செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். ஏ.என்.டி அறக்கட்டளை நிர்வாகிகள் அகிலன், நிவேதா, ஊராட்சி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்