உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / களிமண்ணில் தயாராகும் விநாயகர் சிலைகள்

களிமண்ணில் தயாராகும் விநாயகர் சிலைகள்

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் விநாயகர் சதுர்த்திக்காக களிமண்ணில் 'மெகா சைஸ்' விநாயகர் சிலைகள் தயாராகின்றன.இங்கு சீசனுக்கு ஏற்றார் போல் சுவாமி சிலைகள், நவராத்திரி கொலு பொம்மைகள், கிறிஸ்துமஸ் குடில்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்காக 3 இஞ்ச் முதல் 10 அடி உயரம் வரை, பல்வேறு வடிவங்களில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு ஆதியந்த விநாயகர், கருட வாகன விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் சுற்றுச் சூழலை பராமரிக்கும் வகையில் சிலைகள் தயாராகிறது.தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், ''எங்கள் மூதாதையர் கிராம திருவிழாக்களுக்காக களிமண்ணில் குதிரைகள் தயாரித்தனர். இக்காலத்தில் நான் குடும்பத்துடன் விநாயகர் சிலைகள் தயாரிக்கிறேன். களிமண், ஆற்று மணல் மூலம் இரண்டு அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்க முடியும். அதைவிட உயரமான சிலைகள் தயாரிக்க இவற்றுடன் யானை சாணம் சேர்க்க வேண்டும்.சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுறுத்தலாலும் களிமண்ணால் மட்டுமே சிலைகள் தயாரித்து, வாட்டர் பெயின்ட் பூசுகிறோம். இதுபோன்ற பெரிய விநாயகர் சிலைகள் 20க்கும் மேல் தயாரிக்கிறோம். ஒரு சிலை தயாரிக்க வெயிலில் நன்றாக காய்ந்தால் 18 முதல் 25 நாட்களாகும். மழைத் துாறல் இருந்தாலும் பணிகள் பாதிக்கும். இந்தாண்டு 'மெகா' விநாயகர் சிலைகளுக்கு நிறைய ஆர்டர் வந்துள்ளது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை