உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜி.எஸ்.டி., புதிய திருத்தங்கள் கலந்துரையாடல்

ஜி.எஸ்.டி., புதிய திருத்தங்கள் கலந்துரையாடல்

மதுரை : தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் ஜி.எஸ்.டி வரி முறையில் இ-வே பில், இ- இன்வாய்ஸ் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.தலைமை வகித்து தலைவர் ஜெகதீசன் பேசியதாவது: நாட்டில் ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்ட 7 ஆண்டுகளில் தொழில் வணிகத் துறையினர் பல்வேறு நடைமுறை சிக்கல்களும் சிரமங்களும் குறையாமல் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் இருக்கின்றனர். தமிழகத்தில் ஜி.எஸ்.டி., வரி வசூல் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட ஏற்கப்படுவதில்லை. குறிப்பாக குறைகளை யாரிடம் முறையிட வேண்டும்என்று கூட தெரியாத நிலையில் ஜி.எஸ்.டி., வரிமுறையை தொழில் வணிகத் துறையினர் சந்தித்து வருகின்றனர் என்றார்.தணிக்கையாளர்கள் சரவணக்குமார், பாலசுப்பிரமணியன் ஜி.எஸ்.டி., வரிமுறையில் புதிய திருத்தங்கள் சார்ந்த நோட்டீஸ்களுக்கு பதிலளிக்கும் பரிந்துரைகள், தீர்வுகள் குறித்து விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை