உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டோல்கேட் கேபிளை துண்டித்தால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

டோல்கேட் கேபிளை துண்டித்தால் நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : திண்டுக்கல் - சமயநல்லுார் நான்குவழிச்சாலை கொழிஞ்சிப்பட்டி டோல்கேட்டில் ஓ.எப்.சி., கேபிளை மீண்டும் யாரும் துண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனுார் வேலுச்சாமி தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் - சமயநல்லுார் நான்குவழிச்சாலையில் திண்டுக்கல் மாவட்டம் கொழிஞ்சிபட்டியில் டோல்கேட் உள்ளது. விதிகள்படி நடைபாதை, வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறை, அவசரகால உதவி எண் உட்பட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை. மக்களிடமிருந்து டோல்கேட் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்தது.என்.எச்.ஏ.ஐ., தரப்பு: நடைபாதை, வாகன நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அவசர உதவி அழைப்புகளுக்கான போன் வசதி செய்யப்பட்டது. ஆனால் ஓ.எப்.சி., கேபிள் பல இடங்களில் உள்ளூர் மக்களால் பலமுறை துண்டிக்கப்பட்டதால், அது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. மாற்றாக சாலையை பயன்படுத்துவோரின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் அவசர உதவி எண் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள், தானியங்கி போக்குவரத்து கவுன்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: ஓ.எப்.சி., கேபிள்களை மீண்டும் துண்டித்தால் சம்பந்தப்பட்டோர் மீது என்.எச்.ஏ.ஐ., நிர்வாகம் அல்லது ஒப்பந்ததாரர் கடும் நடவடிக்கை எடுக்கலாம். வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இம்மனு தாக்கல் செய்ததன் நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளது. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை