உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இதய செயலிழப்பு விழிப்புணர்வு மாநாடு

இதய செயலிழப்பு விழிப்புணர்வு மாநாடு

மதுரை : மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் அரித்மியா (ஒழுங்கற்ற இதய துடிப்பு) மற்றும் இதய செயலிழப்பு விழிப்புணர்வு மாநாடு நடந்தது.மருத்துவமனையின் இதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை டாக்டர்கள் ஏற்பாடுகளை செய்தனர். அவசர மருத்துவத் துறை, மயக்க மருந்தியல் துறை, இதயவியல் துறை, பயிற்சி டாக்டர்கள், முதுநிலை டாக்டர்கள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் கல்லுாரி இதயவியல் பேராசிரியர் டாக்டர் நாராயணன் நம்பூதிரி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இ.சி.ஜி., பேஸ்மேக்கர், இதய செயலிழப்பு, எலக்ட்ரோ பிசியாலஜிக்கல் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு விவரிக்கப்பட்டன.தலைவர் டாக்டர் குருசங்கர் பேசுகையில், 30 முதல் 40 வயதுடையவர்களிடையே திடீர் இதயநோயால் ஏற்படும் இறப்புகளும் இதய செயலிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.கவலை, மன அழுத்தம், அதிக வேலை அழுத்தத்தை எதிர்கொள்வோருக்கான எச்சரிக்கை மணி இது'' என்றார்.டாக்டர் ஜெயபாண்டியன் பேசியதாவது: இதய நோயின் ஒட்டு மொத்த இறப்பு விகிதத்தில் திடீர் இதய இறப்புக்கான அரித்மிக் (ஒழுங்கற்ற இதயதுடிப்பு) காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கரோனரி தமனி நோய்களுடன் ஒப்பிடும்போது அரித்மியா மற்றும் இதய செயலிழப்பு பற்றிய பொது விழிப்புணர்வு மிகவும் குறைவு.இந்த மாநாடு பயிற்சி டாக்டர்கள், பொது இதயநோய் நிபுணர்களுக்கு திடீர் இதய இறப்புக்கான அரித்மிக் காரணங்கள் மற்றும் இதய செயலிழப்பு மேலாண்மை பற்றி தெளிவுபடுத்தியது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை