உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதயநிதி துணை முதல்வரானால் பாலாறும், தேனாறுமா ஓடும்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

உதயநிதி துணை முதல்வரானால் பாலாறும், தேனாறுமா ஓடும்; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

உசிலம்பட்டி ; உசிலம்பட்டியில் அ.தி.மு.க., தொண்டர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.அவர் கூறியதாவது: தி.மு.க., அரசின் மீது கடும் கோபத்தில் உள்ள மக்களை திசை திருப்பவே அதிகாரிகளை இடம் மாற்றுகின்றனர். இதனால் மக்களின் கோரிக்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. வைகை அணையில் நீர் மட்டம் அதிகரித்துள்ள சூழலில், ஒரு போக பாசனத்திற்காக முன்னதாகவே தண்ணீர் திறக்க வேண்டும். அம்மா திட்டத்தை 'மக்களுடன் முதல்வர்' என பெயர் மாற்றம் செய்து மனுக்களை பெறுகிறார்கள்.லேப்டாப் வழங்கும் திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது. மாணவர்களை திசை திருப்பும் நோக்கில் ரூ.1000 தருவதாக அறிவிக்கிறார்கள். இன்று மாணவர்கள் பைகளில் போதை பொருட்கள் உள்ளன. 221 நாட்களில் 595 கொலைகள் நடந்துள்ளன. பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழ்நாட்டு மக்கள் வாழ்கிறார்கள்.உதயநிதி துணை முதல்வரானால் பாலாறும், தேனாறும் ஓடப் போகிறதா. இப்போது ஓடுவதைப் போல கள்ளச்சாராய ஆறு தான் ஓடும். முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இருப்பதாக கேரள முதல்வர் கூறியுள்ளார். அணை வலிமையாக உள்ளது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sridhar
ஆக 11, 2024 11:51

அந்த ஆளு என்னவானா என்னய்யா, கேச சட்டுபுட்டுனு நடத்தி உள்ள தள்ளினா எல்லாம் சரியா புடும்மில்ல?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை