உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

மதுரையில் 1.7 லட்சம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர்

மதுரை: மதுரையில் ஜூன் 9ல் நடக்கும் வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வை 393 மையங்களில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் எழுத உள்ளனர்.இதுகுறித்து கலெக்டர் சங்கீதா நேற்று தேர்வு மைய அதிகாரிகள், பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார். டி.ஆர்.ஓ., சக்திவேல், நேர்முக உதவியாளர் சந்திரசேகர் பங்கேற்றனர்.தேர்வு பணியில் 11 துணை கலெக்டர்கள், 11 தாசில்தார்கள், 88 துணைத்தாசில்தார்கள், 393 ஆய்வாளர்கள் ஈடுபடுவர். தேர்வு நாளன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். 30 நிமிடம் கால அவகாசம் உண்டு. 9:00 மணிக்கு ஓ.எம்.ஆர். ஷீட், 9:15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். காலை 9:30 மணிக்கு தேர்வு துவங்கும். மதியம் 12:30 மணிக்கு முடிவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை