உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புத்தாக்க பயிற்சி முகாம்

புத்தாக்க பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில் 'குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு' பாடம் குறித்து புத்தாக்கப் பயிற்சி முகாம் நடந்தது. செயலாளர் அசோக்குமார், இயக்குநர்சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா வரவேற்றார். தோழமை இயக்க இயக்குநர் தேவநேயன், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை பேராசிரியை ஆண்டாள் பேசினர். ஆரோக்கிய பிரிசில்லா எழுதிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு புத்தகத்தை செயலாளர் வெளியிட்டார். பாடம் நடத்துவது தொடர்பான வழிமுறைகள், நெறிமுறைகள் அவற்றில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றனர். தோழமை இயக்க உறுப்பினர் பிரபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி