உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்

திருநகர் மெயின் ரோட்டில் மெகா சைஸ் பள்ளங்கள்

திருநகர்: மதுரை திருநகர் இரண்டாவது பஸ் ஸ்டாப் பகுதி மெயின் ரோட்டில் உள்ள பெரிய பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளது.அப்பகுதியில் ரோடு விரிவாக்கத்தில் வணிக வளாக பிரச்னையால் கழிவுநீர் கால்வாய் பணி பாதியில் நிற்கிறது. அதனால் 500 மீட்டருக்கு மேல் ரோடும் சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. அந்த ரோட்டின்மேல் ஜல்லி, கிரஷர்துாசி கலவை கொட்டி ஒருமாதத்திற்கும் மேலாகிறது. அங்கு தார் ரோடு அமைக்கப்படாததால் துாசி பறக்கிறது. துாசி பறப்பதை தவிர்க்க லாரிமூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது. அப்பகுதி முழுவதும் சிறு சிறு பள்ளங்களும், சில பெரிய பள்ளங்களும் உள்ளன. இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் அருகே வந்ததும், பள்ளங்களை கண்டு விலகி செல்ல முற்படும்போது, விழுந்து காயம் அடைகின்றனர். அந்த பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில், வாகனங்கள் வேகமாக செல்லும் பொழுது பாதசாரிகளுக்கு அபிேஷகம்நடக்கிறது. எனவே பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAGANNATHAN RAMANUJAM
ஜூலை 23, 2024 11:20

சென்னையில் பல மெயின் ரோடுகள் கதி இதேதான் கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ரோடு ஆரம்பித்து நந்தம்பாக்கம், டிஎல்ப் போரூர் இரு புறமும் சிக்னல் வரை மற்றும் ஆற்காட் ரோடு பூராவும் மிகவும் மோசமான கதியில் இருக்கிறது இது இன்று நேற்று பிரச்னை இல்லை கடந்த மூன்றாண்டுகளாக இதே கதி தான். இதனால் பல விபத்துக்கள் நேரிடுகிறது.பல கடிதங்கள் நெடுந்சாலை துறைக்கு அனுப்பினேன் ஒன்றும் பயன் இல்லை


Ganesun Iyer
ஜூலை 23, 2024 11:05

பெரியார், அண்ணா, கருணாநிதி வழி வந்த திராவிடிய ஆட்சியின் மற்றுமொரு சாதனை.. பள்ளத்த சொல்லல இலவச பஸ்ஸ சொன்னேன்...


புதிய வீடியோ