உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புரிந்துணர்வு ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது. முதல்வர்கள் கலை, அறிவியல் கல்லுாரி முருகன், பாலிடெக்னிக் தவமணி, பொறியியல் கல்லுாரி வரதவிஜயன் மற்றும் 5 கே கார் கேர் நிறுவன சி.இ.ஓ., கார்த்திக்குமார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு மாதம் ஒரு முறை, அவர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி மற்றும் நிர்வாக தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. செயல் அலுவலர்கள் முத்துமணி, மீனாட்சிசுந்தரம், பிரபாகரன், திட்ட அதிகாரி பால் நிக்சன் கலந்து கொண்டனர். பேராசிரியர் ராஜ்பிரகாஷ் ஒருங்கிணைத்தார். டீன் ஹேமலதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி