உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சீன் காண்பித்தால் வேலைக்கு ஆகாது அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

சீன் காண்பித்தால் வேலைக்கு ஆகாது அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

திருப்பரங்குன்றம், ; 'தேர்தல் வேலை பார்க்காமல் சீன் காண்பித்தால் வேலைக்கு ஆகாது' என தி.மு.க., தொண்டர்களுக்கு அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்தார்.திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்த அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:திருப்பரங்குன்றம் பகுதியில் தி.மு.க., வினர் வேலை பார்க்கவில்லை என தலைமையில் இருந்து புகார்கள் வருகின்றன. தேர்தலுக்கு 14 நாட்களே உள்ளன. தொண்டர்கள், நிர்வாகிகள் களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். யார் வேலை பார்க்கவில்லை என்றாலும் தயவு தாட்சண்யம் இன்றி தலைமைக்கு புகார் எழுதி விடுவேன். இதனை எச்சரிக்கையாகவே கூறுகிறேன்.தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். திருமங்கலம் செயல் வீரர்கள் கூட்டம் போன்று, திருப்பரங்குன்றத்தில் நடக்கவில்லை. தேர்தலில் வேலை பார்க்கவில்லை என்றால் அதன் பலனை நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் என்றார்.தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணை செயலாளர் பாலாஜி, இளைஞர் அணி அமைப்பாளர் விமல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி