உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்

எர்ரம்பட்டியில் பங்குனி உற்ஸவம்

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே எர்ரம்பட்டியில் முத்தாலம்மன், காளியம்மன் கோயில் பங்குனி உற்ஸவம் ஏப்.,3ல் துவங்கியது. நாட்டாமை வீட்டில்இருந்து பூ பெட்டி, நகை பெட்டியை மேளதாளம், வான வேடிக்கையுடன் கோயிலுக்கு எடுத்து வந்தனர். முத்தாலம்மன் கண் திறப்பு நடந்தது. சாத்தையாறு ஓடையில்காளியம்மனுக்கு கரகம்ஜோடித்து கோயில் அழைத்து வந்தனர். நேற்று காலை பக்தர்கள்முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தும், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஏப்.,5) ஊர்வலமாக எடுத்து சென்று முளைப்பாரி கரைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை