உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்....

போலீஸ் செய்திகள்....

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலிதிருமங்கலம்: திருப்பரங்குன்றத்தை சேர்ந்த கொத்தனார் அழகுமாரி 26. மனைவி பாண்டி லட்சுமி 20. இவர் நேற்று முன்தினம் நிலையூர் கைத்தறி நகரில் ராஜன் என்பவரின் வீட்டியில் கட்டட வேலை பார்த்து வந்தார். மாலையில் வெளிச்சம் குறைவாக இருந்தது. எனவே, தற்காலிகமாக ஒயர் இழுத்து மின் விளக்கு அமைத்து வேலை செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. மருத்துவமனை செல்லும் வழியில் பலியானார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிகின்றனர்.மின்சாரம் தாக்கி பலிஉசிலம்பட்டி: எழுமலை அய்யம்பட்டி கட்டடத் தொழிலாளி அகத்தியன் 53. முத்துபாண்டிபட்டி கணேசன் என்பவருக்கு புதிய வீடு கட்டும்பணியில் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.அரிவாள் வெட்டு: ஐந்து பேர் கைதுகொட்டாம்பட்டி: குன்னாரம்பட்டி ஆசைதம்பி 42, ராமமூர்த்தி 43, இருவருக்கும் கிராமத்து கணக்கை பராமரிக்க கணக்காளர் நியமிப்பது தொடர்பாக விரோதம் இருந்தது. ஜூன் 19 ல் பெரியாண்டவர் கோயில் அருகே ஆசைதம்பியை ராமமூர்த்தி உட்பட 10 பேர் அரிவாளால் வெட்டினர். டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையில் தனிப்படை போலீசார், சிவகங்கை அஜீத்குமார் 21, செந்தில்குமார் 29, அரவிந்த்குமார் 22, வசந்தகுமார் 19, வீரமணி 21, ஆகியோரை கைது செய்தனர்.தொழிலாளி பலி: மக்கள் மறியல் கள்ளிக்குடி: சின்ன உலகாணி கூலித் தொழிலாளி மாரியப்பன் 35, நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வரும்போது இருளில் தடுமாறி சாக்கடைக்குள் விழுந்து இறந்தார். இதனால் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன், எஸ்.ஐ., பாலுசாமி, பி.டி.ஓ., தங்கவேலு பேச்சுவார்த்தை நடத்தினர். சாக்கடை கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். மேலக்கோட்டை - கூடக்கோவில் ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை